கண்டியில் ஏற்பட்ட அமைதியின்மையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை திகன மற்றும் பூஜாப்பிட்டிய பகுதிகளில் இவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
மேலும், இந்த அமைதியின்மைக்கு பிரதான காரணமாக அமைந்தவர் விதான பத்திரணகே அமித் ஜீவன் விரசிங்க என்பவர் என்ற தகவலையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வௌிப்படுத்தினார்.