2018 மார்ச் மாதம் முதல்வாரத்தில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிவாரணம் வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இவ்வாறான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிபந்தனை மற்றும் நியமனங்களுக்கு உட்பட்டதாக 2சதவீத நிவாரண வட்டி அடிப்படையின் கீழ் அத்வெல என்ற கடன்திட்டத்தின் மூலம் கடன் வழங்குவதற்காக அரசதொழில் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன்கிரியெல்ல வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.