தங்க தாத்தா என எல்லோராலும் அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவு நாள் நிகழ்வு இன்று கண்டி கெப்பிடி பொல அரங்கத்தில் இடம்பெற்றது.
கண்டியை மையமாகக் கொண்டு இயங்கும் மலையக கலை கலாச்சார அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதன் பிரதம அதிதியாக மத்திய மாகான் சல் உறுப்பினர் கெளரவ இரா. ராஜாராம் கலந்து கொண்டார்.
மலையகம் மற்றும் வட மாகாணத்தின் கலை கலாச்சரத்துறையில் சிறந்த சேவையாற்றியோர், சமூக சேவையில் தொன்டாற்றியுள்ளோர், சமய ரீதியாக சிப்பான சேவையை ஆற்றியுள்ளோர் மற்றும் சிறந்த தொழிலதிர்கள் என பலரும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விழாவில் உரையாற்றிய பிரதம அதிதி ராஜாராம் தனது உரையில்,
மலையக தமிழர், வடக்கு தமிழர் என நாம் வேறுபாடுகளைகளைத் தெரிந்து தமிழர்களாக ஒன்றாக வாழ வேண்டுமன வலியுறுத்தினார்.
சமூக நீதியாக ஏற்பட்டுள்ள வேறுபாடுகளும் களையப்பட்டு நாம் அனைவரும் ஓரினமாக வாழ்வதனுடாக எதிர்கால அத்தியினர்க்கு ஒரு சிறந்த வழியினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் வடக்கு மலையகம் ஆகிய பகுதிகளிலிருந்து பெருந்திரளானோர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
S.சுஜீவன் – தலவாக்கலை