கண்டி – பேராதனை பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் ஆவணங்கள் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவல் இன்று புதன்கிழமை பகல் இடம் பெற்றுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரின் முயற்சியில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்துக்கு காரணம் மின்சார ஒழுக்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.