கண்டி மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளைத்தொடர்ந்து அம்மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் கால வரையறையின்றி மூடப்படுவதாக கலவியமைச்சு அறிவித்துள்ளது.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கலவரம் பெரிதும் இடம்பெற்ற பகுதியான கண்டியில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு இணைய பாவனை, வலையமைப்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நாடளாவிய ரீதியில் சமூக வலைத்தளமான பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.