கதிர்காமத்தில் பதற்றம் – இதுவரையில் 63 பேர் கைது!!

0
149

கதிர்காமம் காவல் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள குழுவினரை கலைக்க காவற்துறையினர் இன்று பிற்பகலும் மீண்டும் கண்ணீர்ப் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

எதிர்ப்பில் ஈடுபட்ட 63 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.48 ஆண்களும் மற்றும் 15 பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் , குறித்த பிரதேசத்திற்கு காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கதிர்காமம் காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிகாலை தொடக்கம் பிரதேசவாசிகள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலையும் , ஆர்ப்பாட்டகாரர்களை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here