கதைக்கேற்ப கவர்ச்சியாக நடிப்பேன்!

0
1
boldsky
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழி படங்களிலும் பிசியாக இருக்கும் ரைசா, தனது சினிமா பயணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் அறிமுகமான ரைசா வில்சன், தொடர்ந்து எப்.ஐ.ஆர்., பொய்க்கால் குதிரை, காபி வித் லவ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார். சமீபத்தில் வெளியான மிஸ்டர் எக்ஸ் படத்திலும் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

தற்போது தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழி படங்களிலும் பிசியாக இருக்கும் ரைசா, தனது சினிமா பயணம் குறித்து பகிர்ந்துள்ளார். மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்த துவக்கத்தில் பயமும் பதற்றமும் இருந்ததாகவும், காலப்போக்கில் அவை மாறி, இன்று சினிமாவை முழுமையாக அனுபவித்து வருகிறேன் என்றும் கூறினார். தன்னை பற்றிய கிசுகிசுக்கள் குறித்து பேசிய அவர், பல காதல் வதந்திகள் பரவியதாகவும், ஆனால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்றும், உண்மையான காதலை தேடிக்கொண்டிருக்கிறேன் என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும், நடிகைகளை பற்றிய விமர்சனங்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ரைசா, “நடிகைகள் கவர்ச்சியாக உடை அணிந்தாலே அவர்களை தவறாக பேசுவது சரியல்ல. ரசிகர்களை மகிழ்விக்கவே அவர்கள் செய்கிறார்கள். அதனை விமர்சிக்காமல் ரசிக்க வேண்டும்” என்றார். ‘பிகினி’ அணிவது குறித்து வரும் விமர்சனங்களையும் அவர் நிராகரித்தார். மாடலிங் பின்னணியிலிருந்து வந்ததால் அது தவறு அல்ல என்றும், கதைக்கேற்ப கவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் எல்லையை மீறாமல் கவனிப்பேன் என்றும் ரைசா வில்சன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here