ராகம மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அவசர தொலைபேசிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட விசாரணையின் போது இனந்தெரியாத சிலர் இரண்டு பேரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள், ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி 55 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, அவர்களை கைது செய்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.