கந்தப்பளையில் டெங்கு பரவும் அபாயம்.

0
106

நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தப்பளை தேயிலை மலை தோட்டத்தில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமையால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறித்த தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த தோட்ட மக்கள் தெரிவிக்கையில் கடந்த பத்து வருடத்திற்கு மேலாக குப்பைகளை முறையாக அப்புறப்டுத்தாமையினாலும் தோட்ட நிர்வாகம் கண்டுக்கொள்ளாமல் இருப்பதனாலும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடந்த காலங்களில் தோட்ட நிர்வாகங்கள் குப்பைகளை அப்புறப்படுத்த சிலரை நியமித்து முறையாக குப்பை கூழங்களை பராமரித்து வந்தார்கள் ஆனால் தற்போது முறையாக பராமரிக்க தோட்ட நிர்வாகம் முன்வராததால் குப்பை குழிகள் நிரம்பி வழிகின்றது.

குறித்த குப்பை குழியின் அருகில் வீடுகள் காணப்படுகின்றமையினால் காலை, மாலை நேரங்களில் நுளம்புகளின் தொல்லையும் அதே நேரத்தில் துர்நாற்றங்களும் ஏற்படுகின்றது.நுளம்புகளின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் டெங்கு உட்பட்ட நுளம்புகளால் ஏற்பட கூடிய நோய்கள் ஏற்படக்கூடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே தோட்ட நிர்வாகம் நோய்கள் பரவ முன் விரைந்து இதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கந்தபளை தேயிலை மலை தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here