நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தில் சட்டவிரோதமாக விற்கும் மது உட்பட போதை வஸ்து பொருட்கள் அதிகரித்துள்ளதாக குறித்த தோட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த தோட்ட மக்கள் குறிப்பிடுகையில் நெடுங்காலமாகவே இத்தோட்டத்தில் ஓரிருவர் சட்டவிரோத மது விற்பனை இடம்பெற்று வந்தது.ஆனால் தற்போது மதுபான கடைகள் மூடிய பின்னர் லயனுக்கு லயன் விற்பனையாளர்கள் அதிகரித்துள்ளனர்.ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் பல பிரச்சனைகள் ஊரில் அதிகரித்துள்ளதாகவும் தோட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான தீர்வை உடனடியாக எடுக்குமாறு கந்தப்பளை கோட்லோஜ் தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்