கனடாவின் அடுத்த பிரதமராக பதவியேற்கப்போகும் தமிழ் பெண்!

0
22

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ )பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் அந்நாட்டின் அடுத்த பிரதமராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் (Anita Anand)(வயது 57) தெரிவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆனந்த்தின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர், தாய் பஞ்சாப்பை சேர்ந்தவர்.லிபரல் கட்சியின் புதிய தலைவரும் கனடா நாட்டின் புதிய பிரதமரும் மார்ச் 24 ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ட்ரூடோ அறிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.வி. ஆனந்த் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த மருத்துவர் சரோஜ் டி. ராம் தம்பதிக்கு பிறந்தவர் அனிதா ஆனந்த். இவரது பெற்றோர் கனடாவுக்கு புலம்பெயர்ந்த நிலையில், 1967 ஆம் ஆண்டு கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் அனிதா ஆனந்த பிறந்தார்.

கனடாவில் அரசியல் பட்டப்படிப்பும், பிரிட்டனில் சட்டமும் பயின்ற அனிதா ஆனந்த், 1995ஆம் ஆண்டு ஜோன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக கனடாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் சட்டத் துறை பேராசிரியராக சுமார் 25 ஆண்டுகள் அனிதா ஆனந்த் பணியாற்றியுள்ளார்.

லிபரல் கட்சி சார்பில் முதல்முறையாக 2019 தேர்தலில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் வெற்றியை பதிவு செய்தார். அந்த ஆண்டே பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

2021 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து, கனடாவின் இரண்டாவது பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

2024 ஆம் ஆண்டு கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக அனிதாவை பிரதமர் ட்ரூடோ நியமித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவராகவும் கனடாவின் புதிய பிரதமராகவும் அனிதா ஆனந்த் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here