கனடாவை அச்சுறுத்தும் நோய்த்தாக்கம் : மக்களுக்கு எச்சரிக்கை விடுவிப்பு

0
31

கனடாவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.

மேலும்,நாடு முழுவதிலும் இந்த வருடம்,தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வருடம் மாத்திரம் நாட்டில் 40 தட்டம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசிகளை உரிய நேரத்தில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.மேலும்,நாட்டில் பரவி வரும் தட்டம்மை நோய் அதிக வேகமாக பரக்கூடிய தன்மையுடையது என டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,அவுஸ்திரேலியாவின் தலைநகரான மெல்பேனில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here