பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவை, ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரரப் பிணைகளிலும் 25,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் செல்ல கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, அனுமதித்துள்ளார்.
போலி அட்டோனி முறையை பயன்படுத்தி 41 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை, பிரித்து விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஜுன் மாதம் 18ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அவர், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.