மொஹமட் சல்மான் என்ற இரண்டரை வயது குழந்தையும்’குறித்த குந்தையின் உறவினரான மொஹமட் அஸாம் என்ற 23 வயது இளைஞனுமே கடத்தப்பட்டுள்ளனர்
புதன் கிழமை மாலை கம்பளை கங்கவட்ட வீதியில் அமைந்துள்ள குழந்தையின் தந்தையின் வியாபார நிலையத்திற்கு சுமார் ஐம்பது யார் தூரத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டிலிருந்து கடத்தப்பட்ட இளை ஞன் குறித்த குழந்தையினையும் தூக்கிக்கொண்டு வந்த சமயமே குறித்த இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது
சம்பவம் நடைப்பெற்ற பின்னர் மதியம் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் தொலை பேசியூடாக குறித்த குழந்தையின் தந்தையின் தொலை பேசியுடன் தொடர்பு கொண்ட கடத்தல் காரர்கள் குறித்த இருவரும் பத்திரமாக இருப்பதாகவும் தாங்கள் மாலை 6 மணியளவில் மீண்டும் தொடர்பு கொள்வதாகவும் கூறி தொலை பேசியை துண்டித்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்
இதேவேளை கடத்தல் காரர்கள் கூறியதைப்போன்று மீண்டும் தொடர்பு கொள்ளாமையையடுத்து இது குறித்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இச்சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
கம்பளை நிருபர்