கம்பெனிகள் வழக்கு தொடரும் பட்சத்தில் தொழிலாளர்கள் பக்கம் நிற்பேன்

0
68

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக தோட்ட முதலாளிகள் வழக்குத் தாக்கல் செய்தால், தொழிலாளர்களின் பக்கம் நின்று வழக்குத் தொடர ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தோட்ட முதலாளிகள் வழக்கு சம்பள அதிகரிப்புக்கு எதிராக வழக்கு தொடரும் பட்சத்தில் , தொழிலாளர்கள் தரப்பில் இருந்து உண்மைகளை முன்வைப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் சட்ட உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

கொடகலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததுடன், சம்பள அதிகரிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலையும் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் வெளியிட்டு இருந்தார் .

தம்முடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி உரிய வேதன அதிகரிப்பு செய்யப்பட்டமையினால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக தோட்ட முதலாளிமார் சங்கம் அறிவித்தது .

எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தோட்ட முதலாளிகளின் சம்மதத்துடன் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here