கம்போடியா உலகத் தமிழர் மகாநாடு இராஜங்க அமைச்சர் வே.ராதாகிருஷ்ணன தமிழக அமைச்சர் மா.பா.. பாண்டியராஜன் கலந்து கொள்ளுகின்றனர்.
கம்போடியாவில் உலகத் தமிழர் மாநாடு மே மாதம் 19 – 20 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்ரூபவ் கல்வி ராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன் தமிழ் நாடு தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ஆகியோர் மகாநாட்டை ஆரம்பித்து வைக்கின்றனர்.
பண்ணாட்டு தமிழ்ச்சங்கக் கூட்டமைப்புத் தலைவர் மரு.க. திருதணிகாசலம் தென்புலத்தார் அமைப்பின் நிறுவனர் ஓரிசா பாலு சீனிவாசராவ் தென்கிழக்காசியத் தமிழ் சங்க விசாகன் மைலாசலம் கம்போடிய தமிழர் பேரவை முத்தையா ராமசாமி ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த கம்போடியா மகாநாடு தொடர்பாக கம்போடியா தமிழ் கூட்டமைப்பு பண்ணாட்டு தமிழர்
தலைவர் மரு.க. திருதணிகாசலம் கருத்து தெரிவிக்கையில்: கம்போடியா நாட்டின் மிகப்பெரிய வழிபாட்டுத் தலமான அங்கோர்வாட் கோயிலுக்கு அருகில் உலகத் தமிழர் ஒன்று கூடல் மாநாடு வருகிற மே 19ரூபவ் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
தென்புலத்தார் அமைப்பு பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பு கம்போடியா தமிழ்ப் பேரவை
தென்கிழக்காசியத் தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துவருகின்றனர்.
மகா நாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு தமிழ்கள் ஒன்று கூடி தென்கிழக்காசியாவின்
பழைமை வாய்ந்த பாரம்பரிய கோயில்கள் தற்போதைய தென்கிழக்காசிய மக்களின் வாழ்க்கையுடன்
பிண்ணிப் பிணைந்துள்ள பண்டைய கால தமிழ்களின் கலை பண்பாடு கலாசாரம் இசை நடனம் உணவுரூபவ்
உடை விளையாட்டு விவசாயம் கட்டடக்கலை தமிழ் மொழியின் பரவல் போன்ற தமிழரின்
பெருமைகளைப் பறைசாற்ற உள்ளனர்.
இந்த மாநாட்டில் கம்போடியாவின் சியாம் ரீப் தென் கிழக்காசிய பல்கலைக் கழகத்தில் தமிழ்
நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழுக்கான இருக்கை அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தம்கையெழுத்தாக உள்ளது. மேலும் உலகத் தமிழர் ஒன்றிணைந்து பன்னாட்டு வணிக மையம் தொடங்கப்பட உள்ளது.
மேலதிக விபரங்களுக்கு ஒரிசா பாலு: 1091 99402 40487 மரு.க. திருதணியாசலம்
10919884612351 கம்போடியா சீனிவாஸ் ராவ்: 10855 969296456 முத்தையா ராமசாமி:
10855184888998 விசாகன்: 10628159898211 கொழும்பு எச்.எச்;. விக்கிரமசிங்க:
10940777 318030 ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.