நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
குறித்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில் மூன்று நீதிபதிகளில் ஒருவரான ஈவா வணசுந்தர, மன்றிற்கு வராமையால் இந்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தம்மை கைது செய்வதில் இருந்து தவிர்த்துக்கொள்வதற்கான வேண்டுகோளை முன்வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து. தொடர்ந்து, தம்மை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளமை சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.