கரையோர ரயில் சேவைகளின் நேரங்களில் மாற்றம்

0
32

கரையோர ரயில்களின் கால அட்டவணையை இன்று முதல் திருத்தியமைக்க இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மருதானை நோக்கி பயணிக்கும் ‘ருஹுனு குமாரி’ விரைவு ரயில் இன்று காலை 05.25 மணிக்கு பெலியத்த ரயில் நிலையத்தில் இருந்து தனது சேவையை ஆரம்பித்தது.

பெலியத்தவிலிருந்து கொழும்பு கோட்டை மற்றும் மருதானை வரை வார நாட்களில் மாத்திரம் சேவையில் ஈடுபடும் ‘சாகரிகா’ விரைவு ரயில் சனிக்கிழமைகளிலும் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மருதானை புகையிரத நிலையத்தில் இருந்து பயாகல-தெற்கு நோக்கி இரவு 08.35 மணிக்கு இயக்கப்படும் புகையிரதத்தின் இலக்கு இன்று முதல் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருதானையில் இருந்து அளுத்கம நோக்கி பிற்பகல் 02.00 மணிக்கு பயணிக்கும் ரயில் 01.55க்கு மருதானை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த புதிய ரயில் கால அட்டவணையை தொடர வேண்டுமா அல்லது 2 வார கால சோதனைக் காலத்தை பின்பற்றாதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் ரயில்வேயின் பிரதி பொது மேலாளர் என்.ஜே.இண்டிபோலகே மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here