கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மீண்டும் திரிபோஷா விநியோகம்

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முன்பு போலவே திரிபோஷா மற்றும் ஊட்டச்சத்து கூறுகளை மீண்டும் தொடர்ந்து வழங்குவதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குடும்பத்திற்கு ஒரு பெரிய பொருளாதார நிவாரணம் என்றும், மேலும் தாய்ப்பால் வழங்கும் ஊட்டச்சத்து தனித்துவமானது என்றும், குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரும் விசேட நிபுணருமான கலாநிதி சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அனுஷ்டிக்கப்படும் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.