ஆரம்ப கைத்தொழில். பிரதி அமைச்சர் எம் முத்துசிவலிங்கத்தின் வழிக்காட்டலின்
ஊடாக மலையக பிரதேசத்தில் படித்த இளைஞர் யுவதிகள் மத்தியில் கைத்தொழில் தொடர்பாக தெளிவூட்டல் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் முதல் கட்டமாக கடந்த வாரம் நுவரெலியா மஸ்கெலியா பொகவந்தலாவ அம்கமுவ அக்கரப்பத்தனை ராகலை போன்ற பிரதேசத்தில் தெளிவூட்டல் நிகழ்வு இடம்பெற்றது .
இதில் 2 ஆயிரம் இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ் சிவராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அமைச்சரின்
இணைப்பு செயலாளர் எஸ் சச்சிதானந்தம் தெரிவிக்கையில் மலையக பிரதேசத்தில் அதிகமானவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கையை முடித்து விட்டு தொழில் தேடி அழைவதுடன் சிலர் தங்களுக்கு இருக்கின்ற அறிவினை கொண்டு குடும்ப வருமானத்திற்காக சுயத்தொழில் திட்டத்தினை முன்னெடுக்கின்றனர் ஆனால் அவர்களுக்கான எந்த வசதிவாய்ப்பும் இல்லை.தற்போது கிடைத்துள்ள அமைச்சினூடாக மக்கள் நல்ல பயன் பெறக்கூடிய திட்டங்கள் உள்ளன இதனை கட்டாயம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் தற்போது கைத்தொழில் செய்யகூடிய நபர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது.
சேகரிக்கபடுகின்ற தகவலை கொண்டு உதவிகள் செய்யப்படும் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் இதன் அடிப்படையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் இதேவேளை இம்மாதம் நடுப்பகுதியில் முதல் கட்டமாக 40 ஆயிரம் மர கன்றுகள் வழங்கப்படவுள்ளதாகவு இவர் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை நிருபர்