இரத்தினபுரி மாவட்டம் கலவானை வைத்தியசாலை முழுவதுமாக வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வைத்தியசாலைக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கலவானை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களை சீரற்ற கால நிலை காரணமாக பாதுகாப்பாக மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
எனினும் விமானப்படையினரின் கடுமையான பிரயத்தனங்களின் மத்தியில் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 நோயாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.