கருணை இல்லத்தின் இரண்டாவது வருட பூர்த்தியினை முன்னிட்டு நாட்டில் பல பகுதிகளில் கல்வி பொது சாதாரண தர மற்றும் புலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இன்று (26) திகதி தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது கடந்த வருடம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேலாக புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் மற்றும் க.பொ.த சாதாரண தரத்தில் 9 ஏ சித்திகளை பெற்ற நுவரெலியா,ஹட்டன் குருணாகல்,உள்ளிட்ட பல்வேறு கல்வி வலயங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்கப்பதக்கம் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வின் போது கருணை இல்லத்தின் இரண்டாவது வருட பூரத்தியினை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் கருணை இல்லத்திற்கு நன்கொடைகளை வழங்கி சமூக சேவைக்கு ஊக்குவித்தவர்கள்,மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டவர்கள் இதன் போது நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் அழகிய நடனங்களும் இடம்பெற்றன.கருணை இல்லத்தின் உப தலைவர் சிவஸ்ரீ பிரசாந்த சர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு. ஐக்கிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் இயக்குனர் ஜி.ஐ சால்ஸ்,செயலாளரும் ஊடகவியலாளருமான சதீஸ்,தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கருணை இல்லத்தின் உறுப்பினர்கள்,கொடை வள்ளல்கள், ஐக்கிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்