கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

0
79

தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் பிள்ளைகளின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டு வருவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (07) பாராளுமன்றத்தில் அமைந்து காணப்படும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கயந்த கருணாதிலக, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவி கருணாநாயக்க, திலிப் வெதஆராச்சி, சுஜித் சஞ்சய பெரேரா, ஜே.சி அலவத்துவல, அஜித் பி பெரேரா, டொக்டர் பி. சத்தியலிங்கம், எம். எஸ். உதுமா லெப்பே, சத்துர கலப்பதி, திருமதி சமிந்திரானி கிரியெல்ல, அனுராத ஜயரத்ன, இம்ரான் மஹ்ரூப், வி.இராதாகிருஷ்ணன், கிங்ஸ் நெல்சன், சித்ரால் பெர்னாண்டோ, ரோஹினி கவிரத்ன, எம். டி. எம். தாஹிர், டபிள்யூ. எச். எம். தர்மசேன, சாமர சம்பத் தசநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, ஜகத் விதான, சுஜீவ சேனசிங்க,
பி. ஆரியவன்ச, எஸ்.எம்.மரிக்கார், நிசாம் காரியப்பர் மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here