ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, தான் வகித்த மாகாண கல்வி அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதிபர் ஒருவரை மண்டியிட வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடியும்வரை தான் அந்த அமைச்சு பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்த கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக கூறிய ஊவா முதலமைச்சர், துரிதமாக விசாரணை நடத்துமாறு கோரி காவல்துறைமா அதிபருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.