கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0
38

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்க புதிய கல்வி அமைச்சு (Ministry of Education) நடவடிக்கை எடுத்துள்ளது.

சீர்திருத்த முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தச் சீர்திருத்தங்களின் கீழ், பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக ஒரு தொகுதி (அலகு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இது தொடர்பான முன்னோடித் திட்டம் தேசிய கல்வி நிறுவனத்தால் (National Institute of Education) சுமார் இருநூறு பாடசாலைகளில் ஒன்று, ஆறு மற்றும் பத்தாம் ஆண்டு மாணவர்களைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டது.

முன்னோடித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையையும் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here