கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

0
167

076 545 3454 எனும் வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு பொலிஸார் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, 076 545 3454 எனும் வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வாட்ஸ்அப் இலக்கத்தின் மூலம் கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் குறித்து அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாகன சோதனை என்ற போர்வையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக்கூறிக்கொண்டு சிவில் உடையில் சிலர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் நிஹால் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here