வியட்நாம் தலைநகர் ஹனோயில் பாரிய தீ விபத்து; பலி எண்ணிக்கை 56ஆக உயர்வு

0
74

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலி எண்ணிக்கை முன்னதாக 50ஆக இருந்த நிலையில், தற்போது 56ஆக உயர்ந்துள்ளது.
வியட்நாமின் தலைநகர் ஹனோயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை சுமார் 56 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வியட்நாமில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர தீ விபத்து நேற்று நள்ளிரவு ஏற்பட்டுள்ளது. 10 மாடி கட்டிடத்தின் பார்க்கிங் தளத்தில் மோட்டார் பைக்குகள் நிறைந்த பகுதியில் இருந்து தீ விபத்து தொடங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், இறந்தவர்களில் குறைந்தது மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 150 பேர் இருந்ததாகவும், இதில் பலர் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து குடித்ததாகவும் நேரில் தீ விபத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ தடுப்பு விதிமுறைகளை மீறியதாக சந்தேகத்தின் பேரில் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹனோய் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலி எண்ணிக்கை முன்னதாக 50ஆக இருந்த நிலையில், தற்போது 56ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here