களுத்துறை மத்துகமையில் தமிழ் பாடசாலை; அமைச்சர் மனோவின் பத்திரத்தை அமைச்சரவை ஏற்பு!

0
152

களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான மத்துகமை நகரில் தமிழ் பாடசாலை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் சமர்பித்திருந்த அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

இது பற்றி அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,
மத்துகமை நகரிலிருந்து 600 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள நமுனுக்கொல தோட்ட நிறுவனத்தின் யடதொல தோட்டத்தின் மத்துகம பிரிவின் ஐந்து ஏக்கர் காணியை சுவீகரித்து, அவ்விடத்தில் இந்த பாடசாலையை அமைக்க அமைச்சரவையிடம் நான் அனுமதி கோரியிருந்தேன். இதற்கான அனுமதியை இன்று கூடிய அமைச்சரவை வழங்கியுள்ளது. எனது வேண்டுகோளின்படியும், களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானத்தின்படியும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரும், நண்பருமான மகிந்த சமரசிங்கவும் இந்த அமைச்சரவை பத்திரத்தில், எனது அமைச்சுடன் இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரமாக கருதி கையெழுத்திட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here