செங்கலடி பிரதேச களுவங்கேணி கடலில் இன்று மதியம் நண்பர்களுடன் குளிக்க சென்று 16 வயதுடைய ராஜாடென்வர் கிருபா என்ற மாணவன் களுவங்கேணி கடலில் மூழ்கி பலியாகியுள்ளார்.
சடலம் கண்டெடுக்கப்பட்டு தற்போது செங்கலடி பிரேத வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கிறது.
என்போல்ட் , லிந்துல, தலவாக்கலையை பிறப்பிடமாக கொண்ட இம் மாணவன் க.பொ.த உயர்தரத்தில், தொழில்நுட்ப துறையில் மட்டக்களப்பில் கல்வி கற்பதற்கு , வந்தாறுமூலையிலுள்ள உறவினர் வீட்டில் தங்குவதற்காக சென்ற ஜனவரி முதலாம் திகதியேதான் வந்துள்ளார்.
இவரது சடலத்தை அடையாளம் காண பெற்றோர்கள் நுவரெலியாவிலிருந்து, செங்கலடி நோக்கி வந்து கொண்டிருப்பதால் நாளைய தினமே பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்.