கழிவுபொருட்களை உரிய வகையில் வகைப்படுத்தி சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்குமாறு கொழும்பு மாநகர சபை மீண்டும் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இந்த பணிகள் உரிய முறையில் இடம் பெறவில்லை என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பு மாநகர சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கழிவு பொருட்களை கண்ட இடங்களில் வீசியெறிவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.