கழுத்துக் கருமையால் அவஸ்தைப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா.. இலகுவில் விடுபட இதை மட்டும் செய்யுங்கள்

0
124

பொதுவாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை எது என்றால் கழுத்தில் இருக்கும் மிக அடர்த்தியான கருமை நிறம் தான்.

இந்த பிரச்சனையை வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சரி செய்ய முடியம்.

காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் 3 கரண்டி எடுத்து கொள்ளவும், அவற்றை ஒரு துணியால் நனைத்து, அந்த துணியை கழுத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

இந்த முறையை 3 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை செய்ய வேண்டும்.

பாலில் இருக்கும் விட்டமின் கழுத்தை மிருதுவாக வைப்பதுடன் கழுத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய உதவுகிறது.

ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் தண்ணீரை சூடு படுத்தி எடுத்து கொள்ளவும்.

அவற்றில் சுத்தமான துணியை நனைத்து, கழுத்தில் சிறிது நேரம் ஒத்தி எடுத்தோம் என்றால் கழுத்தில் கருமை மறையும்.

கழுத்தில் இருக்கும் கருமையை நீக்குவதற்கு சர்க்கரை மற்றும் எலுமிச்சை இரண்டும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஒரு கிண்ணத்தில் இரண்டு கரண்டி சர்க்கரையை எடுத்து கொள்ளவும். பின்பு எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி , சர்க்கரையில் நனைத்து கழுத்தில் 5 முதல் 10 நிமிடம் வரை மசாஜ் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருமை மறைந்து விடும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரவும்.

ஒரு கிண்ணத்தில் இரண்டு கரண்டி கடலை மாவை எடுத்து கொள்ளவும்.
அவற்றில் ஒரு கரண்டி காய்ச்சாத பசும் பாலை கலந்து கொள்ளவும்.

பின்பு நான்கு துளி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு கரண்டி தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இந்த கலவையை கழுத்தில் தடவி 10 முதல் 15 நிமிடம் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும் இவ்வாறு செய்தால் கழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here