நானுஓயா டெஸ்போர்ட் கீழ் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் பன்றி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இன்று காலை தேயிலை மலையில் பணிபுரிந்துக்கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண், நுவரெலியா ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஹட்டன் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள லெதன்டி தோட்டப் பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டன் காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 9.30 அளவில் அந்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்ட மக்களால் ஹட்டன் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிபடையில் சம்பவம் இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிறுத்தையை மீட்டுள்ளனர்.
மீட்கபட்ட சிறுத்தையின் கழுத்து பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பாக வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு அறிவிக்கபட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.