காட்டு விலங்குகளை வேட்டையாடியவர்கள் பிணையில் விடுதலை!

0
114

நகல்ஸ் வனப் பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடியதாக, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அறுவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, சந்தேகநபர்களை 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து, தெல்தெனிய மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குற்ப்பிட்டுள்ளார்.

சமூல வலைத்தளங்களில் வந்த புகைப்படங்களின் பிரகாரம் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களால் பல காட்டு மிருகங்கள் வேட்டையாடப்படுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத் தலங்களில் வௌியாகியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here