காட்மோர் மற்றும் மஸ்கெலியா டிசைட் வரைக்குமான வீதியை காப்பட் போடுவதற்கான அடி கல்லை நாட்டிவைத்தார் அமைச்சர் பழனி திகாம்பரம்
காட்மோரில் இருந்து மஸ்கெலியா டி,சைட் வரைக்குமான 08கிலோ மீற்றர் தூரத்தினை கொண்ட பிரதான விதி சுமார் 16வருடகாலமாக புனரமைக்கபடாமையினால் குன்றும் குழியுமாக காணபட்டத்தை தொடர்ந்து குறித்த வீதி 20.05.2018.ஞாயிற்றுகிழமை 12மணி அளவில் மூன்று கோடியே ஐம்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கிட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் அடிக்கல் நாட்டிவைக்கபட்டது.
இந்த நிகழ்வின் போது அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரான் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி, மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது .
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)