காதலியை பார்ப்பதற்காக அரச பேருந்தை ஓட்டி சென்றவருக்கு நேர்ந்த கதி!

0
131

ரம்புக்கனை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹத்திரலியத்த பேருந்து நிலையத்தில் இரவு நிறுத்தி வைக்கப்பட்டு சாரதி சென்ற பின்னர் பேருந்து நடத்துனர் அதனை ஓட்டிச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளார்.

தனது காதலியைப் பார்ப்பதற்காக 9 கிலோமீற்றர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்றுவிட்டு திரும்பி வரும் போது விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர் பேருந்தை ஹத்திரலியத்த பேருந்து தரிப்பிடத்திற்கு ஓட்டிச் சென்ற நடத்துனர் ஒன்றும் நடக்காதது போன்று அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேரூந்து ரம்புக்கனை ஹத்திரலியத்த பாதையில் இயங்கும் பேரூந்து என்பதுடன், மறுநாள் காலை 5.30 மணிக்கு மீண்டும் ரம்புக்கனை நோக்கி பயணத்தை ஆரம்பிப்பதற்காக ஹத்திரலியத்த பேருந்து நிலையத்தில் இரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாரதியின் வீடு அருகிலேயே அமைந்திருப்பதால் தினமும் பேருந்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாலும் நடத்துனர் பேருந்திலேயே தங்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நடத்துனர் இரவு பேருந்தில் தனது காதலியை சந்திப்பதற்காக கெபெல்வத்தை என்ற பகுதிக்கு சென்றபோது பேருந்து விபத்துக்குள்ளானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here