19 வயது உடைய இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருப்பதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், குறித்த நபர் தான் காதல் தோல்வியால் தனக்கு தானே தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக, முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸார் சென்று பார்த்த போது அந்த இளைஞர் தனக்கு தானே தூக்கிட்டு கொண்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது எனவும்,
சம்பவம் நடந்த இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி வந்து சடலத்தை கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது சடலம் வைத்தியசாலையில் உள்ள சவ சாலையில் வைக்கப்பட்டுள்ளது.