காபட்” பாதை கோரி கினிகத்தேனையில் ஆர்ப்பாட்டம்!

0
108

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை களுகல பிரதேச பகுதியில் பொல்பிட்டிய, பல்லேவத்த, கொல்லேன, மொரஹேனகம, அம்மத்தாவ, வக்கம, வக்ஷபான ஆகிய கிராம மக்கள், மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் இணைந்து 15.01.2018 அன்று காலை 8 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஐந்து கிராம சேவகர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய பல கிராமங்களுக்கு செல்லும் சுமார் 14 கிலோ மீற்றர் கொண்ட பிரதான வீதியான லக்ஷபான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர்.

DSC00732

இவ்வீதியின் குறைபாடு காரணமாக நாளுக்கு நாள் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதாகவும், இதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் “பொறுப்புவாய்ந்தவர்களே விழித்தெழுங்கள், மாணவர்களின் கல்வியை பாக்காதே” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை காட்சிபடுத்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு சுமார் 200ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதிருப்பதற்காக கினிகத்தேனை பொலிஸாரினால் இடைக்கால தடையும் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்-எஸ். சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here