ஆயிரம் பாடசாலைகள் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலத்திற்கு செல்லும் பிரதான பாதை செப்பனிட்டுத்தறுமாறு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
அட்டன் நோட்டன் பிரதான வீதியின் காசல்ரீ சந்தியிலிருந்து சின்ன மஸ்கெலியா சந்திவரை செல்லும் குருக்குப்பாதையே இவ்வாறு குன்றும் குழியுமாக காணப்படுகின்றது
நோட்டன். காசல்ரீ பிரதேசத்தை சேர்ந்த 400 மேற்பட்ட மாணவர்கள் நாளொன்றுக்கு குறித்த பாதையை பயன் படுத்துவதுடன் காசல்ரி. டங்கள். தோட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் குறித்த பாதையை பயன்படுத்துகின்றனர்
காசல்ரி சந்தியிலிருந்து கார்பெக்ஸ் தமிழ் வித்தியாலயம் வரையிலான சுமார் 350 மீட்டர் தூரம் வரையில் நீண்ட காலமக குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மாணவர்கள் மழை காலங்களில் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்
மாணவர்களின் நலன் கருதி சேதமுற்றுள்ள பதையை செப்பனிட்டுத்தறுமாறு பிரதேச மக்களும் பாடசாலை மாணவர்களும் வேண்டு கோள் விடுக்கின்றனர்
இது தொடர்பில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனிடம் கேட்டபோது
பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் குறித்த பாதையை செப்பனிட நடவடிக்கை எடுத்துள்ளோம் விரைவில் செப்பனிடும் பணி ஆரப்பிக்கடும் எனவும் தெரிவித்தார்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்