நாட்டின் பல நகரங்களில் நிலவும் ஆரோக்கியமற்ற காற்றுடனான வானிலை இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்ப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரம் குறைந்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருவதாகவும், தற்போது நிலவும் வானிலையுடன் அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.