காலியில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் யுவதியின் மரணத்தில் காதலன் சந்தேகம்!

0
147

காலியில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் யுவதியின் மரணம் குறித்து தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த யுவதியின் காதலன் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அம்பாறை பாண்டிருப்பை சேர்ந்த யுவதியும் மட்டகளப்பை பெரியகல்லாரை சேர்ந்த இளைஞனும் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளனர் எனினும் ஆரம்பத்தில் அதற்கு விருப்பம் தெரிவித்த யுவதியின் குடும்பத்தினர் பின்னர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மேற்படி யுவதி தற்கொலை செய்து கொள்வதற்கு அரை மணித்தியாலத்துக்கு முன்னர் தன்னை வீட்டார் சித்திரவதை செய்வதாக அழைப்பேசியில் குறுந்தகவல்களை தனது காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டே யுவதியின் காதலன் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here