காவத்தை பகுதி தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அமைச்சர் திகா கோரிக்கை!

0
118

காவத்தையில் ஏற்பட்டுள்ள இனமுறுகள் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, அதிக பெரும்பான்மை மக்கள் வாழும் அந்த பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் காவத்தை கப்பலே தோட்டத்தில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கும் சிங்களவர் ஒருவருக்கும் ஏற்பட்ட முறுகல் மோதலாக வெடித்து வாள் வெட்டில் சிங்களவர் கடும் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் இதனையடுத்து அங்கு இன முறுகல் ஏற்பட்டு தமிழரின் வீடுகள் திக்கரையாக்கப்பட்டன.

படுகாயமுற்ற இளைஞன் வைத்திசாலையில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியுள்ள நிலையில் அங்கு மேலும் பதற்ற நிலை தோன்றியுள்ளது, இதனையடுத்து சப்பரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ரணமல் கொடித்துவக்கு அவர்களை நேரடியாக தொடர்பு கொண்ட அமைச்சர் பழனி திகாம்பரம் அப்பகுதியில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here