காவலாளிக்கு தகாத வார்த்தையால் பேசிய முகாமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட மக்கள் எதிர்ப்பு போராட்டம்

0
183

ஹட்டன் பெருந்தோட்டத்திற்கு சொந்தமான ஹட்டன் செனன் தோட்டத்தில் முகாமையாளர் விடுதியில் பணிபுரியும் தோட்ட காவலாளி ஒருவருக்கு இன்று காலை தோட்ட முகாமையாளர் தகாத வார்த்தையில் பேசியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தொழிலாளர் இன்று (02) திகதி தோட்ட காரியாலத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சுமார் 100 இற்கும் மேற்பட்ட செனன் ஜி.ரி. புவு பிரிவு தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லாது காலை முதல் பகல் 1.30 வரை குறித்து எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

செனன் தோட்டத்தில் கடமையாற்றும் தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களை மதிக்காது மிகவும் கேவலமான முறையில் நடத்துவதாகவும் தோட்டம் பற்றி எவ்வித அக்கறையுமின்றி மரக்கறி வளர்ப்பதிலும் தேயிலை பிடிங்கி இயற்கை பசளை உற்பத்தி செய்வதில் அக்கறை காட்டி வருவதாகவும் தோட்டம் காடாக மாறி வருவதனை கவனத்தில் கொள்ளாது தோட்டத்தொழிலாளர்களை அந்த காடு வளர்ந்த தோட்டத்தில் 20 கிலோ தேயிலை கொழுந்தினை நாட் பேருக்கு பறிக்க வற்புறுத்துவதாகவும்,இது குறித்து பேசுவதற்கு சென்றால் தலைவர் தலைவிகளை மதிக்காது அவர்களை அசமந்த போக்கில் நடத்துவதாகவும் இவரது அடாவடித்தனமான செயப்பாடு குறித்து எங்கு வேண்டுமானாலும் சென்று முறையிடுமாறு தெரிவிப்பதாகவும் எனவே இவரை இடமாற்றும் செய்யும் வரை நாளை முதல் மூன்று பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து காவலாளி கருத்து தெரிவிக்கையில் நான் சுமார் 07 வருடங்களுக்கு மேல் தோட்ட முகாமையாளர் விடுதியில் காவல் வேலை செய்து வருகிறேன் எந்த ஒரு முகாமையாளரும் இவரை போல் தொழிலாளர்களை கொடுமைபடுத்தியதில்லை இதற்கு முன் இரண்டு காவலாளிகள் வேலை இரவு பகல் வேலை செய்ததாகவும் தற்போது இரண்டு காவலாளியை மாலை ஆறுமணியிருந்து 12 வரை ஒருவரும் நல்லிரவு 1 ஒரு மணியிலிருந்து மற்றுமொரு வேலை செய்ய வேண்டும் என்று சொல்லியிருப்பதாகவும்,அதனை தொடர்ந்து அவர்களின் உடைகளை காவல் வேலையில் ஈடுபடுபவர்களை கழுவ சொல்வதாகவும் அதுவும் முகாமையாளர் அவர்களின் மனைவியின் உள்ளாடைகளை கழுவ வைப்பதாகவும் அதனை தொடர்ந்து தோட்டத்தில் விவசாயத்திலும் மலர் வளர்ப்பதிலும் ஈடுபட செய்வதாகவும் இன்று மலர் செடி ஒன்று வாடியிருந்ததால் தாகாத வார்த்தையில் பேசியதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து மற்றுமொரு தொழிலாளி கருத்து தெரிவிக்கையில் தோட்டத்தில் உள்ள முன்பள்ளியில் தோட்டத்தில் வேலை செய்யாத எந்த ஒரு பிள்ளையினையும் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என உத்தரவுயிட்ள்ளதாகவும் இதனால்; தோட்டத்தில் வேலையின்றி உள்ள குடும்பங்களின் பிள்ளைகளை இடையில் வேறு ஒரு பாலர் பாடசாலையில் சேர்க்க முடியாத நிலையில் பல குடும்பங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்னமொருவர் கருத்து தெரிவிக்விக்கையில் தோட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் சுகயீன முற்று மருந்தகத்திற்கு சென்றால் தோட்டத்தில் வேலை செய்யாதவர்களுக்கு மருந்து பெற்றுக்கொடுக்க வேண்டாம் என தெரிவித்திருப்பதாகவும் இதனால் இத்தோட்டத்தில் வாழும் சிரேஷ்ட்ட பிரஜைகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே இவரை உடன் இடம் மாற்றம் செய்யும் வரை நாளை முதல் செனன் தோட்டத்தில் மூன்று பிரிவுகளையும் சேர்;ந்த தோட்டத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

 

மலைவாஞ்ஞன் ,பிரசாந்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here