காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பாரிய மோதல்!

0
212

வீரக்கெட்டியவில் காவல்துறை அதிகாரிகளுக்கு பிரதேசவாசிகள் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் 2 பொதுமக்கள் காயமடைந்து தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீரகெட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட கோனதெனிய பிரதேசத்தில் கசிப்பு சுற்றிவளைப்பிற்கு சென்று திரும்பும் போது அத்தனயாய பிரதேசத்தில் வீதியில் நின்ற பலரை வீரக்கெட்டிய காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது இரு இளைஞர்களுக்கும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அது மோதலாக மாறியது.

நேற்று இடம்பெற்ற மோதலில் இடையில் தலையிட்ட ஒருவர் கடித்ததில் உப காவல்துறை பரிசோதகர் தனது இரண்டு காதுகளையும் இழந்துள்ளதாக வீரகட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோதலின் போது காதுகள் கடிக்கப்பட்ட உப காவல்துறை பரிசோதகர் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த மோதலில் காயமடைந்த 2 பொதுமக்களும் 4 காவல்துறை உத்தியோகத்தர்களும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here