காவல்துறையினருக்கு பயந்து 14 ஆண்டுகள் குகைவாசம் இருந்த நபர்

0
179

சீனாவில் குற்ற தண்டனைக்கு பயந்து 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து வந்த நபர் தற்போது காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சீனாவில் லூயி என்ற நபர் கடந்த 2009ம் ஆண்டு ₹ 1859 ரூபாய் பணத்தை திருடியுள்ளார்.இந்த திருட்டு சம்பவத்தால் பெரும் அச்சத்திற்கு உள்ளான லூயி, காவலர்களுக்கு பயந்து காட்டுக்குள் தப்பி ஓடியுள்ளார்.

லூயி-க்கு பயம் இறுதிவரை விலகாத காரணத்தினால், காட்டுக்குள் உள்ள குகையிலேயே 14 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு செய்த சிறிய தவறுக்கு அஞ்சி, காட்டுக்குள் தப்பியோடி வாழ்ந்து வந்த லூயி அவரது வாழ்வின் முக்கியமான பல தருணங்களை இழந்துள்ளார்.இதையடுத்து இறுதியாக மனம் மாறிய லூயி காட்டுக்குள் 14 ஆண்டுகள் வசித்து வந்த குகையை விட்டு வெளியேறி, நேரடியாக காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here