காஷ்மீரில் பதட்டம் – 30 பேர் பலி! 5000 தமிழர்கள் சிக்கியுள்ளனரா?

0
170

ஸ்ரீநகர் – காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாஹிடின் போராளி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்த நிகழ்ந்து வரும்   கலவரங்களால் இதுவரை 30 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களின் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் அடங்குவர்.

இதற்கிடையில் காஷ்மீரில் பாகிஸ்தான் அரசாங்கம் கலவரத்தைத் தூண்டி விடுகின்றது என இந்திய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலுள்ள இந்தியத் தூதரை அழைத்து பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சு விளக்கம் கேட்டுள்ளது.

5,000 தமிழர்கள் சிக்கியுள்ளனரா?

இதற்கிடையில் ஜம்மு – காஷ்மீர் பகுதிகளில் நடக்கும் கலவரங்களின் காரணமாக 5,000 தமிழர்கள் சிக்கியுள்ளனர் – பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களைப் பாதுகாக்கவும், மீட்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அறைகூவல் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here