பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (11.4.2024) மெதகம (Medhakama,) – ஈரியகஹமட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஈரியகஹமட – கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 4 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.