கினிகத்தேனையில் உள்ள பாடசாலையில் மாணவி ஒருவர் மீது பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கருதப்படும் மூன்று மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் உள்ள அரை ஒன்றுக்குள் வைத்து இந்த பலாத்காரம் புரியப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி செய்த முறைப்பாட்டை அடுத்து மேற்படி மூன்று மாணவர்களும் கல்வி நடவடிக்கையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி பாடசாலையின் விசாரணைகளின் முடிவில் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த பலாத்காரம் தொடர் சம்பந்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.