ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் ஊந்துருளியும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து இருவருக்கு பலத்தகாயம் .
கினிக்தேனே பகுதியில் இருந்து கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் பகுதியை நோக்கி பயணித்த ஊந்துருளி ஒன்றும் ஹட்டனில் இருந்து நாவலபிட்டி பிரதேசத்தை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவலை பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த விபத்து 16.02.2018. வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் இடம் பெற்றதாக வட்டவலை பொலிஸார் மேலும் குற்றிப்பிட்டனர்
விபத்தில் காயமடைந்த இரண்டு பேரும் கணவன் மணைவியெனவும் ஊந்துருளியில் சென்ற இவர்களின் பிள்ளைக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் காயமடைந்த இருவரும் வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கணவர் கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கும் மனைவி நாவலவிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளதாக வட்டவலை பொலிஸார் குறிப்பிட்டனர்.
தனியார் பேருந்தின் சாரதி மது போதையில் பேருந்தை செலுத்தியதாகவும் அதிக வேகத்தில் பேருந்தை செலுத்தியமை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யபட்டுள்ளதாகவும் வட்டவலை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட சாரதி 17.02.2018.ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்த படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
எஸ்.சதீஸ், மு.இராமச்சந்திரன்