கினிகத்தேனையில் வீதிக்காக மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்!!

0
127

கினிகத்தேனை நகர பகுதியில் பேரகொல்ல, கப்புகெதர, ஹேப்பகந்த, ஒரகட ஆகிய கிராம மக்கள், 13.06.2018 அன்று காலை 11 மணியளவில் கினிகத்தேனை பஸ் தரிப்பிடத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பல கிராமங்களுக்கு செல்லும் சுமார் 09 கிலோ மீற்றர் கொண்ட பிரதான வீதியான கினிகத்தேனை நகரத்திலிருந்து பேரகொல்ல வழியாக கப்புகெதர, ஹேப்பகந்த ஒரகட ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர்.

2000 குடும்பங்கள் பயன்படுத்தும் இந்த வீதி சுமார் 6 வருடங்களுக்கு மேல் புனரமைக்காமல் அரசியல்வாதிகள் காலம் தாழ்த்துவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

பலமுறை மலையக அரசியல் தலைவர்களிடம் முறையிட்டும் இதுவரை எவரும் கவனத்திற்கொள்ளவில்லை எனவும், இதனாலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

DSC08248

இவ்வீதியின் குறைபாடு காரணமாக நாளுக்கு நாள் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதாகவும், இதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் எதிர்ப்பு வாசகங்கள் எழுதிய பதாதைகளை காட்சிபடுத்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு சுமார் 200ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதிருப்பதற்காக கினிகத்தேனை பொலிஸாரினால் இடைக்கால தடையும் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here