கிராண்ட்பாஸ் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இதுவரையில் 7 பேர் பலி!!

0
114

இரண்டாம் இணைப்பு

கொழும்பு – கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

adams group of company என்ற கட்டடத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தத்தில் கட்டடத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

கொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.இன்று மதியம் 3.15 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தேயிலை களஞ்சிய கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து வீழந்துள்ள நிலையில் , இதில் காயமடைந்த நபர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்குண்டுள்ள மேலும் சிலரை மீட்கும் பணியில் காவற்துறையினரால் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

Untitled

Untitled

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here